லுணுகலை பாக்குத்தோட்டம் 50 ஏக்கர் சைபிரஸ் வனப்பகுதியில் பாரிய காட்டு தீ பரவி வருவதாகவும் இதுவரையில் 6 ஏக்கர் காட்டுப்பகுதி காட்டு தீயினால் எரிந்து நாசமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இங்கிலாந்து பிரஜையான ஐவன் ரொபின்சனுக்கு சொந்தமான வனப்பகுதியிலேயே காட்டுத் தீ பரவுகின்றது என பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் வெளிமடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெளிமடை வைத்தியசாலைக்கு பின்புறமாக அமைந்துள்ள வனப்பகுதியிலும் காட்டுத்தீ பரவி வருவதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரி மேலும் தெரிவித்தார்.
மேலும் ஹல்துமுல்ல கினிகஸ்கல பைனஸ் காட்டு பகுதியிலும் கடந்த 3 நாட்களாக தீ பரவி வருவதோடு பதுளை கஹட்டரூப்ப வனப்பகுதியிலும் பாரிய தீ ஏற்பட்டுள்ளதாகவும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரி தெரிவித்தார்.