நாட்டில் தற்போது மிக வேகமாக பரவி வரும் கண் நோய் குறித்து கண் வைத்தியசாலை வைத்தியர் ஏ. ஆர். எம் தௌபீக் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த நோயின் ஆரம்ப கட்டம் கண் அரிப்பு மற்றும் நோய்வாய்ப்பட்ட கண்ணின் சுரப்பை ஆரோக்கியமான கண்களில் படுவதாகல் நோய்வாய்ப்படும் சந்தர்ப்பம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கண் நோய் வராமல் இருக்க கைகளை சவர்காரம் இட்டு கழுவுமாறும், கூடுமானவரை நெரிசலான இடங்களிலிருந்து விலகி இருக்கவும், நோயாளிகளைத் தொடுவதைத் தவிர்க்கவும் என அவர் கூறியுள்ளார்.