வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்று மழையுடன் கூடிய நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.
சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கலாம்.
ஏனைய பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். இந்த பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.