மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று செவ்வாய்க்கிழமை மாலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது பெய்து வரும் மழையுடனான வானிலையில் அடுத்த இரண்டு நாட்களில் தற்காலிகமாக குறைவடையும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.