நாட்டின் பல பகுதிகளில் மழை

சப்ரகமுவ மாகாணம், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைப்பகுதிகளின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.