நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இரவு வேளைகளில் மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி மேல், மத்திய, சபரகமுவ வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என்பதுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் பலத்த காற்றும் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.