நாட்டின் பல பாகங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதன்படி, மத்திய, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுகிறது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில், மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.