எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படுவதுடன், மாவட்ட மட்டத்தில் இன்று வியாழக்கிழமை முதல் டெங்கு நுளம்பு ஒழிப்பு குழுக்களை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், பொலிஸார், முப்படையினர், சிவில் பாதுகாப்புப் படையினர், டெங்கு நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களின் உதவிகளை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.