வெயங்கொடை பகுதியில் நாடகப் பயிற்சிக்காகச் சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவர் மீது மாணவர்கள் குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதுடன் இவர்களை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
வெயங்கொடை பிரதேச பாடசாலை ஒன்றின் பதினொன்றாம் வகுப்பில் கல்வி கற்கும் 17 வயது மாணவனே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
நாடக பயிற்சிக்காகச் சென்ற குறித்த மாணவன் பயிற்சியை முடித்துக் கொண்டு வதுராவ ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து தாக்கப்பட்டுள்ளதுடன் குறித்த மாணவன் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் தந்தை வெயங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் அதே பாடசாலையில் பன்னிரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவர்களே தன்னை தாக்கியதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.