நவராத்திரி பண்டிகை விழா இன்று ஞாயிற்று கிழமை ஆரம்பமாகி சரஸ்வதி பூஜை 23ஆம் திகதியும், விஜயதசமி 24ஆம் திகதியும் கொண்டாடப்படுகின்றது.
நவராத்திரி தொடக்க தினமான இன்று நண்பகல் 12 முதல் 1.30 மணி வரை எமகண்டம் ஆகும். தொடர்ந்து, பகல் 3 முதல் 4.30 வரை குளிகையும், மாலை 4.30 முதல் 6 வரை ராகு காலமும் வருகின்றது.
இதனால் கலசம் வைத்து வழிபடுபவர்களும், கொலு வைத்து வழிபடுபவர்களும் பகல் 12 மணிக்கு முன்பாக கொலு அமைத்துவிட வேண்டும்.
மேலும் முதல் நாள் வழிபாட்டினை மாலை 6.15 மணிக்கு மேல் தொடங்குவது சிறந்தது. மகாளய அமாவாசை நேற்று சனிக்கிழமை என்பதால் வேலை பளு அதிகம் இருப்பினும் சிறிது சிறிதாக கூட கொலு வைக்கலாம்.