-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் கட்டளையாளர்களுக்கான நல்வழிப்படுத்தல் விழிப்புணர்வு செயலமர்வு நேற்று திங்கட்கிழமை பிரதேச செமலக மண்டபத்தில் இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதலுக்கிணங்க இடம் பெற்ற குறித்த நிகழ்வில் போதை பொருள் பாவனையால் ஏற்படும் பாதக விளைவுகள் மற்றும் உளவளம் தொடர்பிலும் விழிப்புணர்வூட்டப்பட்டது.
வளவாளராக கப்பல் துறை சுதேச ஆதார வைத்தியசாலையின் சமுதாய அபிவிருத்தி வைத்தியர் டொக்டர் மல்சா ஜெயரட்ண கலந்து சிறப்பித்தார். இதனை சமூக சேவைகள் கிளையும் சமுதாய அபிவிருத்தி பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
இதில் தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், நிருவாக உத்தியோகத்தர் உடகெதர மற்றும் சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.