நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியமை தொடர்பில் ஏழு சந்தேகநபர்கள் கைது

செப்டெம்பர் 08 ஆம் திகதி தெமட்டகொட லக்கிரு செவன வீடமைப்புத் தொகுதிக்கு அருகில் நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியமை தொடர்பில் ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் பாதிக்கப்பட்டவரின் கைகளை வெட்டியதாகவும், வாள்களால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் தெமட்டகொட, கலிபுல்ல வத்தே பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 3 வாள்கள், 3 கத்திகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்கள் 18-31 வயதுடைய வெல்லம்பிட்டிய, தெமட்டகொட மற்றும் வெலிமடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

சந்தேகநபர் ஒருவர் கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்திலும், தெமட்டகொடையில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தெமட்டகொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.