லுனுகம பகுதியில் உணவு விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி நேற்று ஞாயிற்று கிழமை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லுனுகம, மண்டாவல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் நேற்று உணவு விடுதிக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். இதன் போது அங்கு நீச்சல் தடாகம் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் இருந்த அவர் கிரிபத்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.