பண்டாரகம, பத்தேகொட பிரதேசத்தில் நண்பருடன் சட்டவிரோத மதுபானம் அருந்தியவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹல்தொட்ட துத்திரிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் முச்சக்கர வண்டி சாரதியான இஷான் புஷ்பகுமார (வயது – 45) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பத்தேகொட பிரதேசத்திற்கு அருகில் வீடொன்றை நிர்மாணித்து வரும் நிலையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறிய கொட்டகையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் முன்னெடுத்த சோதனையின் போது சடலத்தின் அருகில் 500 மில்லி மீற்றர் சட்டவிரோத மதுபான போத்தல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவருடன் மது அருந்தியதாக கூறப்படும் நண்பரிடம் வாக்குமூலம் பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
பாணந்துறை குற்றவியல் ஆய்வக அதிகாரிகள் வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், நீதவான் விசாரணையும் நடத்தப்பட உள்ளது.