இந்தியாவில் ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் நரசாராவ்பேட்டை மண்டலத்தில் உள்ள யாக்களவாரி பாளையம் கிராமத்தில் நேற்று ஞாயிற்று கிழமை அதிகாலை நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் சூர்யாவின் பேனர்களை கட்டி கொண்டிருந்தபோது பேனர் இரும்பு கம்பி என்பதால் அருகிலிருந்த மின்சார வயர் மீது எதிர்பாராத விதமாக உரசி மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்துள்ளனர்.
மின்சாரம் தாக்கியதில் வெங்கடேஷ் (வயது – 19 )இ சாய் (வயது – 20) ஆகிய ரசிகர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
பொலிஸார் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.