-யாழ் நிருபர்-
வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலேச்சரர் ஆலயத்தில் ஐப்பசி இறுதி வெள்ளி தினம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இயம சங்காரம் இடம்பெற்றது.
எம் பெருமானுக்கு மாலை 3.30 மணியளவில் விசேட அபிஷேக பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து எம்பெருமான் வெளிவீதிக்கு எழுந்தருளியாக வலம் வந்து இயமனை சங்காரம் புரிந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.
</ul