-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்தில் இருந்து மான்கள் திருகோணமலை நகர்புறத்துக்கு அதிகமாக வருவதனால் விபத்துக்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் காணப்படுவதாக புத்திஜீவிகள் குறிப்பிடுகின்றனர்.
மான்களுக்கு உண்பதற்கு போதுமான உணவு இல்லாமையினாலேயே மான்கள் உணவைத் தேடி நகரை அண்மித்த பகுதியில் அங்குமிங்கும் அதிகளவில் நடமாடி வருகின்றது.
இதனால் வீதி விபத்துக்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் மான்கள் இறக்கும் வீதமும் அதிகரித்துள்ளது.
அத்துடன் திருகோணமலை பொது சந்தையில் காலையில் மான்கள் உணவைக் தேடி வருவதனையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
இருந்த போதிலும் மான்கள் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்து பொலித்தீன்களையும் உட்கொண்டு வருகின்றதையும் அவதானிக்க கூடியதாகவும், எதிர்காலத்தில் மான்களை பாதுகாப்பதற்கு சிறந்த திட்டம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டும் எனவும் புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
