முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பில் இன்று சனிக்கிழமை அதிகாலை மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை மக்களின் வாழிடங்களை சேதப்படுத்தியுள்ளது.
கைவேலி பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்களுக்குள் யானை புகுந்து காணிகளின் வேலிகளை நாசப்படுத்தியுள்ளதுடன் அப் பகுதியில் அமைந்துள் கணேசா வித்தியாலயத்தின் மதிலினையும் சேதப்படுத்தி உள்ளது.
மேலும், அண்மைக்காலமாக புதுக்குடியிருப்பு கைவேலி, வேணாவில் பகுதிகளில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துவருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.