-மூதூர் நிருபர்-
இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வு திருகோணமலை – தோப்பூர் பொலிஸ் நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
தோப்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எப்.எம்.றமீஸ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தோப்பூர் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள், தோப்பூர் பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்