வவுனியா – தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் ஐவர் நேற்று திங்கட்கிழமை மாலை மெதவெத்தியகுளம், சிவபுரம், பாம்பேமடுவ மற்றும் நெலக்குளம் ஆகிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவைச் சேர்ந்த 24, 27, 31 மற்றும் 34 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.