தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது அரசாங்கத்துக்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நானுஓயா ரயில் நிலையத்தின் கள விஜயத்தில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சம்பள விடயம் தொடர்பில் தோட்டத் தொழில்கள் அமைச்சும் நிதி அமைச்சும் தொடர்ந்து தலையிட்டு வருவதாகவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் இலாபகரமான டிப்போக்களுக்கு போனஸ் வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர்பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.