வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை பள்ளிவாசலில் தொளுகையை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவன் மீது இளைஞன் ஒருவனால் இரும்பு பொல்லுகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் படுகாயமடைந்த மாணவன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன் போது சு. சுகைர்அகமட் என்ற (வயது – 18) என்ற மாணவனே காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.