கிரிஉல்ல முதுகல சந்தியிலிருந்து பிஹல்பொல நோக்கி செல்லும் பிரதான வீதியில் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான தொலைபேசி கம்பிகளை திருடிய இரு சந்தேகநபர்கள் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாரம்மல பிரதேசத்தை சேர்ந்த 35 மற்றும் 59 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிஉல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.