கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் தொற்றுக்கழிவு மற்றும் திண்மக்கழிவுளை முகாமைத்துவம் செய்யும் செயற்றிட்டத்தின் கீழ் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கான கள விஜயமும், பயிற்சிநெறியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரியின் தலைமையில் நேற்று முன் தினம் நடைபெற்ற இப்பயிற்சி நெறியில் பொதுச்சுகாதார மற்றும் தர முகாமைத்துவப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.எம்.ஹில்மி, வளவாளராக கலந்து கொண்டு இந்நிகழ்வில் விரிவுரையாற்றினார்.
