நாட்டில் தொற்றாத நோய்களால் வருடாந்தம் 120,000 பேர் உயிரிழப்பதாக தொற்றா நோய்கள் தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
புகையிலை, மதுபான பாவனை, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் என்பன தொற்றா நோய்களுக்கு பிரதான காரணிகள் என தெரிவிக்கப்படுகின்றது. தொற்றாத நோய்கள்
நாட்டில் முதியோர் எண்ணிக்கை அதிகரிப்புடன், தொற்றா நோய்கள் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.