கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் உடப்புஸ்ஸல்லாவ தோட்டத்தின் மூன்று தொழிலாளர்கள் நேற்று புதன் கிழமை நண்பகல் முதல் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் 4 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், நீண்ட காலமாக தமக்கு வழங்கப்படாதுள்ள பங்கு இலாபத்தை தோட்ட நிறுவனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கான உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி குறித்த 3 தொழிலாளர்களும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களும் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.