தேர்தல் திணைக்களத்திற்கு புதிய உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பு சபையின் பரிந்துரைகளின் பேரில், பேராசிரியர் டி. எம். எஸ். எஸ்.லக்ஷ்மன் திஸாநாயக்க இன்று புதன்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.