தேர்தல் மனுவை முன்வைப்பதற்கான காலப்பகுதியை நீடிப்பதற்காகவும், குற்றத்திற்கான அபராத தொகையை அதிகரிப்பதற்காகவும் தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம், வர்த்தமானி நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவால், பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இது உள்ளுர் அதிகாரசபைத் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தையும், நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தையும், ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தையும், மாகாணசபைத் தேர்தல்கள் சட்டத்தையும் திருத்துவதற்கும், அவற்றோடு தொடர்புடைய அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடுசெய்வதற்குமானதொரு சட்டமூலமாகும்.