இலங்கையில் உள்ள யுனெஸ்கோ நிறுவனமும் மத்திய கலாசார நிதியமும் ஹப்புத்தளை தொடருந்து மார்க்கத்திற்கு அருகில் அமைந்துள்ள ஹப்புத்தளை தேயிலை நிலப்பரப்பு மண்டலத்தை உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்க தயாராகி வருகின்றன.
சீனாவில் உள்ள தேயிலை ஏற்கனவே உலக பாரம்பரிய தளமாக பெயரிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஹப்புத்தளை தேயிலை நிலப்பரப்பு மண்டலத்தை பாரம்பரிய பட்டியலில் சேர்ப்பது மதிப்பு சேர்க்கும் என்று மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் நிலன் கூரே தெரிவித்தார்.










