தேயிலை துாளின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக, சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் 100 – 130 ரூபாவாக இருந்த ஒரு கிலோ தேயிலையின் விலை, டொலருடன் ஒப்பிடுகையில் அதிகரித்து தற்போது 260 ரூபாவைத் தாண்டியுள்ளதாக சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார பிரியதர்சன தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் முதல் சலுகை விலையில் உரம் வழங்கும் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி தேயிலையின் தரத்தை உயர்த்தும் தேசிய மட்ட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.