யாழ்ப்பாணத்தில் இலங்கை வங்கி உத்தியோகத்தர் ஒருவர் நேற்று சனிக்கிழமை தேநீர் அருந்திக்கொண்டிருந்த நிலையில், திடீரென உயிரிழந்துள்ளார்.
தம்பசிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த 41 வயதுடைய வங்கி உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஒட்டுசுட்டான் இலங்கை வங்கிக் கிளையில் நிறைவேற்று உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் அவர், கொடிகாமம் பகுதியில் தேநீர் அருந்திக்கொண்டிருந்ததாகவும், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு முச்சக்கரவண்டியில் மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும்போது அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.