தேசபந்து தென்னகோனை பொலிஸ் மாஅதிபர் பதவியில் இருந்து நீக்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் மீது நேற்று (06) இடம்பெற்ற வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக 177 பேரும், எதிராக எவரும் வாக்களிக்கவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாத்திரம் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்த நிலையில், தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது .
இந்நிலையில் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தற்போது ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதன் பின்னர் ஜனாதிபதி, அரசியலமைப்பு சபைக்கு பொலிஸ் மாஅதிபர் பதவிக்கான புதியவரின் பெயரை பரிந்துரைப்பார்.