நாட்டில் தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடு நிலவுவதாக நாடகமாடி, அரச அதிகாரிகள் குழுவொன்றும், வர்த்தக குழுவொன்றும் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்ய முயல்வதாக, அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
தம்புள்ளையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அந்த சங்கத்தின் பேச்சாளர் புத்திக டி சில்வா இதனை தெரிவித்தார்.