தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கலனிகம மற்றும் தொடங்கொட இடையே 31ஆவது கிலோமீற்றர் பகுதியில் 5 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
மாத்தறை நோக்கி பயணித்த இரண்டு பேருந்துகளும், மூன்று கார்களும் மோதியதில் சிலர் காயமடைந்துள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தையடுத்து குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்தை சீரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.