தென் கொரியாவின் புசான் விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஹாங்காங் நோக்கி புறப்படவிருந்த ஏர் புசான் விமானத்தின் பின்பகுதியிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விமானம் பயணிக்கத் தயாராக இருந்த நிலையில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் , விபத்தின் போது 4 பயணிகள் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் போது 169 பயணிகள் மற்றும் 7 பணியாளர்கள் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.