பூஸா இராணுவ முகாமிற்கு முன்பாக உள்ள வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த நபரை இன்று வியாழக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் கோடரியால் தாக்கியுள்ளனர்.
பூஸா பிட்டிவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய நபரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த நபரின் மகனை இன்று காலை கும்பல் ஒன்று வாளால் தாக்கி காயப்படுத்தியதாகவும், பின்னர் அவரது தந்தை காயமடைந்த நபரின் வீட்டிற்கு சென்று திட்டியதையடுத்து குறித்த தந்தை கோடரியால் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.