இலங்கையில் தங்கியிருந்த துருக்கியைச் சேர்ந்த யுவதியை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியமை தொடர்பில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளான யுவதி துருக்கி நாட்டின் பொலிஸ் உயரதிகாரி ஒருவரின் மகள் என்று தெரியவந்துள்ளது.
கண்டியிலிருந்து தம்புளைக்கு பயணிகள் போக்குவரத்து பேருந்தில் துருக்கி யுவதிகள் மூவரும் பாகிஸ்தான் இளைஞர் ஒருவரும் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த துன்புறுத்தல் இடம்பெற்றுள்ளது.
மூன்று பேர் அமர்ந்து செல்லும் ஆசனத்தையுடைய பேருந்தில் இரண்டு துருக்கி யுவதிகள் ஒரு ஆசனத்திலும் பாகிஸ்தான் இளைஞரும் மற்றைய யுவதியும் மற்றுமொரு ஆசனத்திலும் அமர்ந்து பயணித்துள்ளனர்.
இதன்போது இடைநடுவில் பேருந்தில் ஏறிய நபர் குறித்த துருக்கி யுவதிகள் இருவர் அமர்ந்திருந்த ஆசனத்தில் அமர்ந்து பயணித்துள்ளார். இதன்போது அதில் ஒரு துருக்கி யுவதி தூங்கியதும் சந்தேகநபர் நித்திரையிலிருந்த யுவதியின் அங்கங்களைத் தொடுவதைக் கண்ட மற்றைய யுவதி இது தொடர்பில் தம்முடன் பயணித்த மற்றைய நண்பர்களுக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து அவரது நண்பர்களும் ஏனையவர்களும் இணைந்து சந்தேகநபரை பிடித்து தம்புளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.