அனுராதபுரம் – ஹிதோகம பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் 5 கிலோ நிறையுடைய காட்டுப்பன்றி இறைச்சியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை ஹிதோகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம், ஹிதோகம, துருவில பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிதோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.