ஹம்பாந்தோட்டை பதகிரிய பிரதேசத்தில் கடுமையான தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காரில் பயணித்த இருவர், குறித்த நபரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். எனினும், அதன்போது துப்பாக்கி இயங்காததால் அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதனால் சந்தேகநபர்கள் அவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
தாக்குதலின் போது 44 வயதுடைய நபர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.