அம்பலாங்கொட பலபிட்டிய வைத்தியசாலைக்கு அருகில் இன்று புதன்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த 28 வயதுடைய நபர் ஒருவர் இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு ரீ-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தியவரை அடையாளம் காண விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் தொடர்பாக இரு போட்டி கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச்சூடு நடந்திருக்கலாம் என , பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
அம்பலாங்கொடையில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கும் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
உயிரிழந்தவர் வத்துகெதர பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.