திருகோணமலை மொரவெவ காட்டுப்பகுதியில் விமானப்படை முகாமின் பயிற்சி நிலை சிப்பாய் ஒருவர் ஆரம்ப பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் டி-56 வகை துப்பாக்கியுடன் நேற்று சனிக்கிழமை மாலை காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி வக்வெல்ல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய விமானப்படை சிப்பாய் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சிப்பாய் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.