கம்பளை, குருந்துவத்தை உடஹெந்தென்ன பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டில் தாயாக்கரிப்பட்ட துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது 35 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கியானது ரி-56 துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் தோட்டாக்களை பயன்படுத்தி சுடக்கூடிய துப்பாக்கி ஆகும். இந்த துப்பாக்கி வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.