மாத்தறை வெலிகம-பெலன பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை காலை இரண்டு மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரியொருவர் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இதன் போது தெமட்டகொட பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்க்ப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஜம்புரேகொட பிரதேசத்திற்கு இன்று அதிகாலை இரண்டு மணியளவில் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று வேனில் வந்துள்ளதுடன், அதேவேளையில் அடயாளம் தெரியாத குழுவொன்று பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன் போது சுடப்பட்ட சார்ஜென்ட் உயிரிழந்துள்ளதுடன் சப்-இன்ஸ்பெக்டரின் கால்களில் பல தோட்டாக்கள் தாக்கியுள்ளன.
தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பிரகாரம் விசேட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.