காலியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்தவர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச்சூடு தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.