கிராண்ட்பாஸ் சேதாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டில் 48 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த நபரின் வீட்என் மன் வைத்து இனந்தெரியாத நபர் ஒருவர் வந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு வேறு நபர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேக நபர்களை கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.