அம்பலாங்கொட, மீட்டியாகொட பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.