மினுவாங்கொடை மஹகம பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில்இ பாதாள குழு ஒன்றின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தார்.
மஹகம பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் சோதனை நடத்தப்பட்ட போது சந்தேகநபர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியதை தொடர்ந்து அதிரடிப்படையினர் நடத்திய, பதில் துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேகநபர் உயிரிழந்தார்.
துப்பாக்கிச்சூட்டில் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவர் காயமடைந்த நிலையில், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.