புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கனேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ சமரரத்ன உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வழக்கு ஒன்று தொடர்பில் முன்னிலைப்படுத்துவதற்காகப் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு அவர் அழைத்துவரப்பட்ட நிலையில் இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பலத்த காயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.