கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று புதன் கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வழக்கு ஒன்று தொடர்பில் முன்னிலைப்படுத்துவதற்காகப் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு அவர் அழைத்துவரப்பட்ட நிலையில் இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர் போல் உடையணிந்த சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சட்டத்தரணியின் சீருடையில் பிரவேசித்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரே இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தித் தப்பிச்சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக வாழைத்தோட்டம் காவல்துறை தெரிவித்துள்ளது.