நாட்டில் உள்ள 16,000 தொடர்பாடல் கோபுரங்களில் அனர்த்த நிலைமை காரணமாக 4,000 கோபுரங்கள் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் இதுவரை சுமார் 2,500 கோபுரங்கள் மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் பல தொடர்பாடல் அமைப்புகள் மாகாணங்களுக்கிடையே ஃபைபர் தொழில்நுட்பம் (Fiber technology) மூலமாகவே இணைக்கப்பட்டுள்ளன.
மண்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல இடங்களில் இந்த ஃபைபர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
2 நாட்களுக்கு முன்னர் நுவரெலியா, குருணாகல் உள்ளிட்ட பல பிரதேசங்களில் பல இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன.
இதன்காரணமாக கொழும்புடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதால், பல மாகாணங்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டன.
எனினும், தற்போது துண்டிக்கப்பட்டிருந்த 11 ஃபைபர் இணைப்புகளில் 2 இடங்கள் தவிர ஏனைய அனைத்தும் சீரமைக்கப்பட்டுள்ளன.
100% இணைப்பு கிடைக்கப்பெறாவிட்டாலும், சாதாரண நிலையை அடைந்துள்ளோம் என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.